தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்!

0
196
தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்
தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்!

சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.ஆண்கள், பெண்கள், இளைஞர்களை  தான் அதிக அளவில் அடிமையாக்கியுள்ளது.

பெரும்பாலும் 15 முதல் 25 வயது வரையிலான இளம் தலைமுறையினர் தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் 50 முதல் 60 சதவிகித சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் சாலை விபத்து ஏற்படுத்தும் மரணங்களில் முதலிடத்தில் உள்ளது.மது பழக்கத்தால் ஆல்கஹால் உடலுக்கு சென்று மூளையில் பல தீங்குகள் ஏற்படுத்துவதன் காரணமாக வாந்தி, மயக்கம், கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியாக இருந்தபோது திமுக மதுவிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்தியது, தற்பொழுது அதைப்பற்றி சிரிதும் கண்டுகொள்வதில்லை.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார், மேலும் அதிக வருமானத்தை ஈட்டுமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆணையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தானியங்கி இயந்திரம் மூலம் சிகரெட் விற்றால் சிறுவர்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளதால் இந்தியா முதற்கொண்டு உலகமுழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்கப்படும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும் “தமிழக அரசுக்கு” பல்வேறு தரப்பினரும்  கடும் கண்டணத்தை தெரிவித்து வருகின்றனர்.