ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் – வானதி சீனிவாசன்!

0
205
#image_title

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி.

கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார்.

அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுப்புகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது.

மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தான் கவலைப்படுகிறார்கள். கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள்.

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன்.

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று திமுக காங்கிரசுடன் இருப்பது என்ன?
ஊழல் கரை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல். பாஜகவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும்.

பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது.கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் பிரதமர் பிரச்சாரம் செயல்படுகிறது. கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மை உடன் வரும். தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதனை மீண்டும் நோண்ட வேண்டாம்.

Previous articleசிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!
Next articleலாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!