Breaking News, Cinema, State

திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா??

Photo of author

By Rupa

திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா??

சினிமா உலகில் நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.மேலும் விக்னேஷ் சிவன் கையி ல் இருந்து AK 62 பட வாய்ப்பும் கை நழுவியது. எந்த ஹீரோவை வைத்து அடுத்த படம் பண்ணலாம் என தெரியாமல் இருக்கிறார்.

இதனால் பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இருந்தாலும் இருவரின் தற்போதைய மார்க்கெட் கம்மி தான்.இதனால் இவர்கள் எடுத்த முடிவுதான் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம். தற்போது இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் முதல் படத்தை குஜராத்தி மொழியில் தயாரித்து வருகின்றது.

சுபயாத்ரா என பெயரிடப்பட்ட இந்த படம் தமிழில் விஜய் சேதுபதியிம் ரித்திகா சிங்கும் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சைனி இயக்குகிறார். இந்த படத்தின் வரவேற்பை பார்த்து அடுத்த படம் குஜராத்தியில் தயாரிக்கலாமா என முடிவு எடுக்க உள்ளனர்.

ஏற்கனவே மும்பையில் பல தொழில்களை தன்கைவசம் வைத்துள்ள நயன்தாராவுக்கு பட வாய்ப்பும் இல்லாததால் வேறு மொழிகளில் படங்களை தயாரிக்கலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர்

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!