தயிருடன் இந்த 4 பொருள் சேர்த்து சாப்பிடுங்கள்!! உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் பாய் பாய்!!

Photo of author

By Sakthi

தயிருடன் இந்த 4 பொருள் சேர்த்து சாப்பிடுங்கள்!! உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் பாய் பாய்!!

Sakthi

Updated on:

தயிரை இந்த 4 பொருள்களுடன் சாப்பிடுங்கள்!! பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்!!

நாம் தினமும் உண்ணும் உணவில் தயிரையும் எடுத்துக் கொள்கிறோம். பாலில் இருந்து கிடைக்கும் இந்த தயிர் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகின்றது. தயிரில் நம் உடலுக்குத் தேவையான புரதம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் மட்டும் இல்லாமல் தயிருடன் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் பொருள்களை கலந்து சாப்பிட்டால் இன்னும் பல சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.

எல்லாரும் பொதுவாக பால் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் அதிகம் உட்கொள்கிறார்கள். அதற்கு காரணம் இதில் இருக்கும் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களே காரணம். இந்த சத்துக்கள் நம் உடலை பலப்படுத்தி நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கின்றது.

முக்கியமாக கோடை காலத்தில் தயிர் இல்லாமல் உணவு இருக்காது. அப்படிப்பட்ட தயிரில் மேலும் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு இன்னும் பல சத்துக்கள் கிடைக்கின்றது.

* தயிருடன் சீரகத்தை சேர்த்துக் கொள்வது:

தயிருடன் சீரகத்தை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது. அது மட்டுமில்லாமல் ஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபட தயிருடன் சீரகத்தை சேர்த்து சாப்பிட வேண்டும்.

தயிருடன் சீரகத்தை சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலில் செரிமான பகுதி ஆரோக்கியமடைந்து உணவு எளிதில் ஜீரணம் ஆக உதவி செய்கின்றது. வறுத்த சீரகத்தையும் சிறிதளவு உப்பையும் தயிரில் சேர்த்து சாப்பிட்டால் பசி அதிகரிக்கும். சீரகப் பொடியையும் பயன்படுத்தலாம்.

தயிருடன் உலர் பலங்களை சேர்த்துக் கொள்வது:

தயிருடன் உலர் பலங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பொருள்களை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். தயிருடன் உலர் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் நமது நினைவாற்றலை கூர்மையாக்கும். மேலும் நமது உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்.

தயிருடன் வெல்லத்தை சேர்த்துக் கொள்வது:

தயிருடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நன்மையை அளிக்கின்றது. உடலுக்கு தேவையான எதிர்ப்புச் சக்தியை வழங்குகின்றது. தயிருடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கின்றது.

இதனால் இரத்தசோகை நோய் நமக்கு வருவது தடுக்கப்படுகிறது. தயிருடன் வெல்லத்தை கலந்து சாப்பிடுவது மலச்சிக்கல், வாயுத் தொல்லை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.

தயிருடன் திராட்சைய சேர்த்துக் கொள்வது:

திராட்சையில் புரதம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து ஆகியவை உள்ளதால் நம் உடலுக்கு தேவையான பலச்சத்துக்கள் ஒரு சேர கிடைக்கின்றது.

தயிருடன் திராட்சையை சேர்த்து சாப்பிடுவது நம் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது. அது போல காலையில் வெறும் வயிற்றில் தயிரை சாப்பிடுவது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கின்றது.