மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 19 தொழிற்சங்கங்களுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில பங்கேற்க தொழிற்சங்கத்தினருக்கு மின்வாரியம் அழைப்பு.
01-12-2019 அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம் படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வும் , 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 சதவீத வெயிட்டேஜும் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என மின்வாரியம் தொழிற்சங்கத்தினருக்கு வாக்குறுதி அளித்த நிலையில்.
10 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு 3 % வெயிட்டேஜும், 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு 6% வெயிட்டேஜும் கொடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைக்கு தொழிற்சங்கத்தினருக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி வரும் 10 ஆம் தேதி இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.