ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும் நான் முதல்வர், புதுமை பெண் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் மூலம் 1 லட்சம் பேர் பயனடைகிறார்கள். பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம் ஆகியவற்றிர்க்கு ஆணைகள் வழங்க உள்ளார்.

மேலும், திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் பொருட்டு, திமுக சாதனைகளை விளக்கும் “ஈடில்லா ஆட்சி ஈரான்டே சாட்சி” என்ற சாதனை மலரை வெளியிடுகிறார்.பிறகு  திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் , எம்பிக்கள்,சென்னை மேயர், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.