மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம். வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு.
மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதாவது Online Shopping என்பதின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றது.
ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஃஸாப்கிளூஸ், மந்த்ரா, மீசோ போன்று பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. ஆன்லைன் வரத்தகத்தில் கொடுக்கப்படும் தள்ளுபடிக்கும் இலவசங்களுக்கும் மக்கள் மயங்கி அதிக அளவில் ஆன்லைன் வர்த்தகம் செய்கின்றனர். இதனால் கடைகளில் மக்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்குவது குறைகின்றது. இதனையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து போராடுவோம் என்று வணிகர் சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையின் அவர்கள் மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருக்கிறோம். எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி ஒழியும் வரை நாம் அனைவரும் போராட வேண்டும். அந்நிய தயாரிப்பு பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தி விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.