குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

0
246
AIADMK strongly condemns closure of schools
AIADMK strongly condemns closure of schools

குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

அதிமுக ஆட்சியில் எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடங்கியது  என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியை இழுத்து மூட துடிக்கிறது இந்த விடியா  திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்.

சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். காவலர்களின் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலக அளவிலான கல்வித் தரத்தை வழங்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்கில் 2017-ஆம் ஆண்டு Police-public இணைந்து தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றை நிறுவ அனுமதி வழங்கியது.

மேலும் இந்த பள்ளிக் கட்டிடங்களுக்கு நிதியாக 51 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது, மேலும் 2018-ஆம் ஆண்டில் 1 முதல் 4 வரையிலும் வகுப்புகள் நடைபெற்றது, இந்த பள்ளிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த பள்ளிகளுக்கான கட்டிட வகுப்பறைகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு செயல்பாட்டிற்க்கு வந்தது, மேலும் 1 முதல் 8 வரையிலும் வகுப்புகள் முழுமையான செயல்பாட்டிற்க்கு வந்ததும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்த வேண்டும் என்று அம்மா அவர்களின் அரசு ஆணையிட்டது.

இந்த சிறந்த பள்ளி வளாகத்தை தாம்பரம் காவல் ஆணையகரத்திற்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட ஸ்டாலின் தலையிலான விடியா ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உத்தரவு காவலர் பணியில் இருக்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடங்கியது  என்ற ஒரே காரணத்திற்காக இழுத்து மூட துடிக்கும் விடியா அரசே தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலக அளவிலான கல்வித் தரத்தை வழங்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்கில் 2017-ஆம் ஆண்டு Police-public பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று இந்த ஆட்சியை வலியுறுத்துகிறேன்.

Previous articleதிராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!
Next articleமதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை – வைகோ பேட்டி!