பலாப்பழம் கண் பார்வை திறனை அதிகரிக்குமா!!
கண்களின் பயன்பாடு நமக்கு மிக முக்கியமானது. காலையில் எழுந்து, இரவு படுக்கைக்குச் செல்வது வரையிலும் ஒரு நாளில் கண்களின் பயன்பாடு அளவில்லாத தாகும். கணினியில் இடையறாது பணிபுரிந்து இந்த உலகின் ஒவ்வொரு காட்சிகளையும் நமக்குத் திறந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்குப் பாதிப்பு உண்டாகிறது.முக்கனியில் ஒன்றான பலாப்பழம் கண் பார்வைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
பல வைட்டமின்களில், பலாப்பழ விதைகளில் உள்ள சிறிய அளவு வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது கண்புரை மற்றும் தசைகளின் சிதைவைத் தடுக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க பலாப்பழம் உதவுகிறது.
குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.