அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

Photo of author

By Sakthi

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது.

இரத்த தானம் செய்வதால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். எனவே ஆண்டுக்கு ஆறு முறை இரத்த தானம் செய்ய வேண்டும்.

கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் நிர்மலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் 10603 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். 2022ம் ஆண்டில் 13184 பேர் இரத்த தானம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு முதல் பாதியில் நேற்று வரை 4886 பேர் இரத்த தானம் செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இந்த வருடமும் தொடரந்து செயல்படுத்த இரத்த தான முகாம்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.