தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

0
229
#image_title
தடுமாறும் நாம் தமிழர் கட்சி, தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?
நாம் தமிழர் என்னும் அமைப்பு படிபடியாக மாறி “நாம் தமிழர் கட்சி” ஆக உருமாறியது. கட்சியாகவும் மாறி பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி
 தமிழகத்தைதையும், இலங்கையும் உலுக்கியது. அதன் பிறகு, நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட தொடங்கியது. அதன் பிறகு சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது.
அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது இருப்பினும் மிகவும் சொற்ப வாக்குகளை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மக்களிடத்தில் தனி கவனம் பெற்றது என்றே சொல்லலாம்.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை சற்று அதிகமான வாக்குகளை பெற்றது. ஆனாலும், எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் மக்களின் ஆதரவு சற்று அதிகரித்தது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது. இந்த முறை மக்களின் ஆதரவை பல மடங்கு பெருக்கியது. அக்கட்சி அதிகமான வாக்குகளை பெற்றும் தோல்வியை தழுவியது.
 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு இந்த முறை சற்று சறுக்கலை சந்தித்தது. மக்களின் ஆதரவு சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு மக்களிடத்தில் குறைந்தே காணப்பட்டது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பெருமிதத்துடன் பேசப்பட்டது. மக்கள் பலராலும் வரவேற்கப்பட்டது. ஆனால் தற்போது சீமான் அவர்களின் பேச்சு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அவர் கூறுவது முற்றிலும் பொய் உண்மைக்கு மாறானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் சீமான் அவர்கள் பற்றிய மீம்ஸ்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மக்களிடத்திலும் நாம் தமிழர் கட்சிக்கு இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சற்று சறுக்கலைச் சந்தித்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் கட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து கட்சியை மீட்டெடுக்கலாமே என்று அரசியல் விமர்சனங்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Previous articleதி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!!
Next articleவெளியான +2 தேர்வு முடிவுகள்! தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!!