இந்த ஒரு ட்ரிங்க் இருந்தால் 1 வாரத்தில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்!!

Photo of author

By Sakthi

இந்த ஒரு ட்ரிங்க் இருந்தால் 1 வாரத்தில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்!!

உடலில் இரத்தம் குறைவாக இருக்கும் நபர்கள் பலவிதமான இன்னல்களை சந்தித்தித்து வருவீர்கள். இந்த பதிவில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்காலம்.

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட்(நறுக்கியது) – ஒரு கப் அளவு

* கேரட் (நறுக்கியது) – ஒரு கப் அளவு

* வெல்லம் (இடித்தது) – ஒரு கப் அளவு

* எலுமிச்சை – 1/2 பழம்

செய்முறை

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட் இரண்டையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பிறகு மீண்டும் இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் இதை அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்க வேண்டும். பிறகு இந்த வெல்லத்துடன் ஒரு கப் அளவு தண்ணீரை சேர்க்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள கேரட் பீட்ரூட் கலவையை இதில் சேர்க்க வேண்டும்.

இதை நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு மூன்று நிமிடம் வரை கொதிக்க வைத்த பிறகு இதில் எலுமிச்சம் பழச் சாறை சேர்க்கலாம். எலுமிச்சம் பழச் சாற்றை சேர்த்த பிறகு மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு இதை இறக்கி வைக்கவும். இந்த கலவை ஆறிய பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வெளியில் வைத்து இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

இதை குடிக்கும் முறை:

தயார் செய்து வைத்துள்ள இந்த கேரட் பீட்ரூட் கலவையில் இருந்து நான்கு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றவும். பிறகு இதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரை எலுமிச்சம் பழச் சாற்றை இதில் சேர்த்துக் கொள்ளவும். உடல் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சூடான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பிறகு இதை குடிக்கலாம். அவ்வாறு இல்லை என்றால் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஜூஸை குடிக்க வேண்டும்.

பயன்கள்

* இதை தினசரி குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

* இதை தயார் செய்து குடித்தால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.

* இந்த ஜூஸை தயார் செய்து குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறிவிடும்.

* நம் உடலில் உள்ள

இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.