வாரம் இரண்டு முறை இந்த துவையல் சாப்பிட்டு வாருங்கள்!! இந்த நோய்கள் போன இடம் தெரியாது!!
பிரண்டை எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய பொருள். பிரண்டை பலவகைகளில் உண்டு. இதில் பட்டை பிரண்டை தான் அதிகமாக இருக்கிறது.
பிரண்டையில் உள்ள முதன்மையான சத்துகளில் முக்கியமானது கால்சியம். வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தவிர கொழுப்பு, புரதம், நார்சத்து, இரும்பு சத்து ஆகியவையும் பிரண்டையில் உள்ளன.
பிரண்டையின் ஊட்டச்சத்துக்கள் உடலில் பெரிதும் உதவுகிறது. இது குறித்த ஆய்வுகளிலும் பிரண்டை பயன்படுத்துவது தொடர்ந்து உடலில் கொழுப்பு எரிக்கும் சக்திகளை அதிகப்படுத்துவதை காட்டுகிறது. நீங்கள் எடை இழக்க விரும்பினால் அவ்வபோது பிரண்டையை சேர்ப்பதன் மூலம் எடை இழப்பில் முன்னேற்றம் காணலாம்.
பிரண்டை தற்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இதை வீட்டிலும் எளிதாக வளர்க்கலாம். ஒரு சிறு பகுதியை வெட்டி அதை சிறுந்தொட்டியில் வைத்தாலே அழகாக பற்றி வளரும். ஆரோக்கியம் தேவையெனில் பிரண்டைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பிரண்டையை சுத்தம் செய்யும் போதும், அதை சமைக்கும் போதும் கவனமாக இருங்கள். இவை அரிப்பை உண்டாக்க கூடியது. அதே போன்று பிரண்டை ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை. வெகு அரிதாக இவை யாருக்கேனும் இருந்தால் மருத்துவர் அனுமதியுடன் பயன்படுத்துங்கள்.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
பிரண்டை இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தாள் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.