நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்!! திரையங்குகளுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ்!!

Photo of author

By Sakthi

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்!! திரையங்குகளுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ்!!
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் நேற்று நள்ளிரவு ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் மீண்டும் ஓடிடியில் ரிலீஸாகி உள்ளது.
இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சாகுந்தலம். இந்த திரைப்படத்தில் தேவ் மோகன், பிரகாஷ் ராஜ், கௌதமி, ஹரீஸ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த திரைப்படத்தை தயாரித்த தில் ராஜூ அவர்களும் இந்த திரைப்படம் தோல்வியடைந்தது என்னுடயை திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு தோல்வியை சந்தித்தது இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சாகுந்தலம் திரைப்படம் நேற்று நள்ளிரவு அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. சுமார் 65 கோடி செலவில் எடுக்கப்பட்ட சாகுந்தலம் திரைப்படம் 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாமல் தயாரிப்பாளருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.