நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கும் STR!! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
164
STR with actor Kamal Haasan!! Excited fans!!
STR with actor Kamal Haasan!! Excited fans!!
நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கும் STR!! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்க இருக்கும் 234வது படமான KH234 படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க சிலம்பரசன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அனைவருடைய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது அதிகரித்துள்ளது.
மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமாகும். இதனால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக KH234 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதையடுத்து KH234 திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. KH234 திரைப்படத்தில் உள்ள கதாப்பாத்திரத்திற்கு நடிகர் சிலம்பரசன் அவர்கள் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்தாகவும் அவருடைய கால்ஷீட்டிற்காக படக்குழு காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.