நான் அவுட்டாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் பேட்டி!!

Photo of author

By Sakthi

நான் அவுட்டாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் பேட்டி.
போட்டியில் நான் அவுட்டாக வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள் கூறியுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு  ரவீந்திர ஜடேஜா பேசினார்.
சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்கள், “சென்னை அணி பேட்டிங் செய்யும் பொழுது நான் பேட்டிங் செய்ய வந்தால் சி.எஸ்.கே ரசிகர்கள் நான் எப்போது அவுட் ஆவேன் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஏன் என்றால் நான் அவுட் ஆனால் தான் தோனி அவர்கள் வர முடியும். ரசிகர்கள் அனைவரும் தோனி அவர்களின் ஆட்டத்தை பார்க்கவே காத்திருப்பார்கள்.  நான் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அப்பொழுது “தோனி தோனி” என்ற சத்தத்தை மட்டுமே கேட்க முடியும். இருந்தாலும் அணி வெற்றிபெறும் வரை நான் மகிழ்ச்சியாக ஆடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.