கர்நாடகத் தேர்தலுக்கு இவ்வளவு கோடி ரூபாய் செலவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0
198
#image_title
கர்நாடகத் தேர்தலுக்கு இவ்வளவு கோடி ரூபாய் செலவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்த கர்நாடக மாநலம் சட்டசபை தேர்தலுக்கு ஆன செலவுகள் பற்றி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் திரைப் பிரபலங்களும், பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அமைதியான முறையில் வாக்களித்தனர். இந்த தேர்தலின் முடிவுகள் வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி  வெளியாகவுள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலுக்கு ஆன செலவுகள் பற்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் 440 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் சுமார் 58,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் மின்னணு இயந்திரங்களை கொண்டு செல்ல பேருந்துகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து ஒரு தொகுதிக்கு சராசரியாக 1.96 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. தொகுதிக்கு 1.96 கோடி வீதம் மொத்தம் 224 தொகுதிகளுக்கு 440 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Previous articleகுழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!
Next articleபல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு வேடங்களில்! விடாமுயற்சி திரைப்படம் பற்றி வெளியான தகவல்!!