தொண்டை வலி, தொண்டை புண் 7 நாட்களில் குணமாக வேண்டுமா! அதற்கான எளிமையான வைத்தியம் இதோ!

0
229
#image_title
தொண்டை வலி, தொண்டை புண் 7 நாட்களில் குணமாக வேண்டுமா! அதற்கான எளிமையான வைத்தியம் இதோ!
நம்மில் சிலருக்கு தொண்டை வலி, தொண்டை புண், இருமல் போன்றவை இருக்கும். இதனால் இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு இருப்போம். இந்த தொண்டை வலி, தொண்டைப் புண், இருமல் ஆகியவற்றை 7 நாட்களில் குணப்படுத்த அருமையான மற்றும் எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது டான்சிலிட்டிஸ் எனப்படும் நோயை குணப்படுத்த இந்த வைத்தியத்தை ஒரு நாள் மட்டும் செய்தால் போதும். டான்சிலிட்டிஸ் நோய் குணமடையும். டான்சிலிட்டிஸ் எனப்படும் வார்த்தையில் டான்சில் என்பது நமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு உறுப்பு. இந்த உறுப்பு நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கு ஏற்படும் வைரஸ் தொற்று, பாக்டீரியாக்களை எதிர்த்து இந்த உறுப்பு போராடும். அவ்வாறு எதிர்த்து போராடும் பொழுது தொண்டையில் புண், வலி, வீக்கம் ஏற்படும். இந்த வலி வீக்கம் நாளடைவில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுவிடும். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து அந்த டான்சிலை நீக்கி விட்டால் இது நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் இந்த டாக்சிலை நீக்காமல் இருப்பது நல்லது. ஏன் என்றால் இந்த டாக்சில் உறுப்பு நம் நுரையீரலுக்கு நல்ல காற்றை அனுப்பக் கூடிய உறுப்பாகும். இதனால் வரும் தொண்டை வலி, தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்த தோவையான வைத்தியத்தை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இதை செய்ய தேவையான பொருட்கள்:
* பூண்டு
* காட்டன் துணி
* நல்லெண்ணெய்
* அகல் விளக்கு
* தேன்
செய்யும் முறை:
இரண்டு முழு பூண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டில் இருக்கும் காம்பை நீக்கி விட்டு இந்த பூண்டுகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து எடுத்த இந்த விழுதை காட்டன் துணியில் போட்டு ஒத்தடம் கொடுப்பதற்கு தகுந்த மாதிரி கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகல் விளக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு திரியை வைத்து விளக்கை பற்ற வைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்து காட்டன் துணியில் கட்டி வைத்துள்ள இந்த பூண்டுகளை எரியும் விளக்கில் லேசாக காட்டி சூடு செய்ய வேண்டும். இரண்டு நிமிடம் சூடு செய்யும் பொழுது சிறிது கரிய தொடங்கும். அவ்வாறு கரியத் தொடங்கினால் தான் பூண்டுகளின் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
இந்த கரி நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது. அதனால் தான் இதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெயில் இருந்து வெளி வரும் கார்பன் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, வீக்கம், புண் போன்றவற்றை சரி செய்யும் குணம் பெற்றது.
இந்த பூண்டை சூடு செய்த பிறகு ஒரு டம்ளரில் இதை நன்கு பிளிந்து கொள்ளவும். ஒரு முறை மட்டுமே இந்த பூண்டுகளை சூடு செய்ய வேண்டும். பிறகு இதனுடன் தேனை பயன்படுத்த வேண்டும். எந்த அளவு பூண்டு சாறு உள்ளதோ அந்த அளவிற்கு தேனை அதில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் இதை ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
இந்த மருந்தை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதை காலை வேலையில் வெறும் வயிற்றில் இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும். இதை குடிக்கும் பொழுது மெதுவாக குடிக்க வேண்டும். அவ்வாறு மெதுவாக சாப்பிடும் பொழுது உமிழ்நீரில் கலந்து தொண்டையின் எல்லா பகுதிகளிலும் இந்த மருந்து படும். தொடர்ந்து 7 நாட்கள் இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால் டான்சிலிட்டிஸ் நோய் குணமாகும்.
Previous articleஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!
Next articleஉங்கள் வீட்டில் தங்கம் இல்லையா! இதை செய்தால் வீட்டில் நிறைய தங்கம் சேரும்!!