100 கோடி வசூலை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி! 8 நாட்களில் செய்த சாதனை!
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தி கேரளா ஸ்டோரி படக்குழு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கடந்த மே 5ம் தேதி இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்திய நாட்டில் பல மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த திரைப்படத்தை வெளியிடாமல் இருக்கின்றது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி வெளியான மாநிலங்களில் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான நாளில் இருந்து கடந்த 8 நாட்களில் இதுவரை 93.86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்துள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்.
பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவது வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று அல்லதை நாளை 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி செல்வதா படக்குழு மத்தியில் சாதனையாக பார்க்கப்படுகிறது.