திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா!! நடிகருடன் லிவிங் டூ கெதர்!!

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா!! நடிகருடன் லிவிங் டூ கெதர்!!

20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வரும் நடிகை திரிஷா. இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றும் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் நடித்த சில ஹீரோயின்  முதன்மை கதாப்பாத்திரத்தில் இருக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்த “குந்தவை” கதாபாத்திரம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது விஜயுடன் லியோ படத்தில் நடித்து கொண்டுள்ளார். அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷாவிற்கு தற்போது 40 வயது ஆகிறது. ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னால் திரிஷாவிற்கும், வருண் என்பருக்கும் நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்றது.

அது திருமணம் வரை செல்லவில்லை. இதற்கிடையே திருமணம் நின்றதற்கு காரணம் திரிஷாவின் தாய் என கூறப்பட்டது. பிறகு திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என மாப்பிள்ளை வீட்டார் போட்ட கண்டிசன் காரணம் என பல காரணங்கள் சொல்லப்பட்டது. தற்போது, திரிஷா, தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நடிகர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், விஷயம் வெளியே தெரிந்ததும், தெலுங்கு சினிமா,  திரிஷாவை ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் லிவிங் டூ கெதர் பாதியில் முறிந்து விட்டதாக கூறப்படுகிறது.

நடிகை திரிஷா தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது  நடிகர் ராணா டகுபதியுடன் சேர்ந்து  பார்ட்டி மற்றும் பப்களுக்கு சென்றதாக கிசுகிசுக்கப் பட்டார். எனவே அந்த நடிகர் ராணா டகுபதியாகத்தான் இருக்கும் என சமுக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட பிரமோசனில், அவரிடம் திருமணம் பற்றிய கேள்வி முன் வைக்கப் பட்ட போது, என் மனதுக்கு பிடித்த ஒருவரை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்வேன். திருமணத்திற்கு பிறகான விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்து இருக்கிறார்.