ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
269
#image_title

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம்மில் பலருக்கு முகத்தில் முகப்பருக்கள் இருக்கும். இதை சரி செய்ய நிறைய சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். சிகிச்சை பெற்றும் முகப்பருக்கள் தற்காலிகமாக மறைந்து மீண்டும் முகத்தில் பருக்கள் வந்துவிடும். அவ்வாறு மீண்டும் வராமல் முகப்பருக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

முகப்பருக்களை நீக்கும் மருந்தை தயார் செய்யும் முறை…

 

இந்த மருந்தை தயார் செய்ய சீரகம் ஒன்று மட்டுமே போதுமானது. இந்த சீரகம் முகப்பருக்களை நீக்கும். முகப்பருக்களை கட்டுப்படுத்தும்.

 

இந்த சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை இதில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் தண்ணீராக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கருப்பான நிறம் வரும் வரை கொதிக்க வைத்து பிறகு இதை இறக்கிக் கொள்ளவும். ஆறிய பின்பு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

இந்த தண்ணீர் ஆறிய பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து அதை இந்த தண்ணீரில் நினைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஏற்கனவே இருக்கும் முகப்பருக்களை நீக்கும். மேலும் முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

 

மேலும் இந்த தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிது கற்றாழை ஜெல்லை இதில் சேர்த்து கொதிக்க வைத்து இந்த தண்ணீரை வடிகட்டியும் பயன்படுத்தலாம்.

Previous article7 நாள் இதை செய்யுங்கள்.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!!
Next articleஇதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!!