மலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

0
157

உலகின் வயதான பிரதமர் என்ற பெருமையை கொண்ட 94வயது மலேசியாவின் பிரதமர் முகமது மகாதீர் என்பவர் திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக மலேசிய மன்னருக்கு செய்தி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மலேசியாவில் தற்போது மலேசியா ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து தனது பிரதமர் பதவியை மகாதீர் முகமது ராஜினாமா செய்ததாகவும் அவர் தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் மகாதீர் கொடுத்துள்ளதாக கூறப்பட்டாலும் மன்னர் அதனை ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை

மலேசிய பிரதமரின் ஆட்சிக்கு மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிம் என்பவர் திடீரென தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் தான் மலேசிய பிரதமர் பதவி விலக இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மலேசிய பிரதமர் திடீரென பதவி விலகியதால் மலேசிய பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தியாவின் சிஏஏ சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர் மலேசிய பிரதமர் மகாதீர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleவீட்டிலிருந்தே நிலவுக்கு சென்ற அதிசயம்! இளைஞர்களின் புது அவதாரம் மூன் செல்ஃபி..!!
Next articleடிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா?