சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் !
சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து விஜய்யை இயக்கவுள்ள நிலையில் இப்போது அந்த படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் ரிலிஸுக்கு முன்னதாகவே விற்பனை ஆகியுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகளை இப்போது படக்குழு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெற்றிப் படம் அமையாமல் தவிக்கும் சூரியா இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த கதை மேல் உள்ள நம்பிக்கையால் அவர் இந்த படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கவும் செய்துள்ளார்.
இன்னும் ரிலிஸே ஆகாத நிலையில் இந்த படம் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக விஜய் சூரரைப் போற்று திரைப்படத்தை தனியாக பார்த்துள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
மற்றொரு புறம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு நல்ல செய்தியாக ரிலிஸுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் குணீத் மோங்கா இதற்கான உரிமைகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சூரரைப் போற்று ரிலீஸானதும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க உள்ளனர்.