விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

0
192
Vijay's next film!! Director Venkat Prabhu?
Vijay's next film!! Director Venkat Prabhu?

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

இயக்குனர் வெங்கட் பிரபு சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

அதே போல் நடிகர் விஜயும், பீஸ்ட் மற்றும் வாரிசு படத்தின் தோல்விக்கு பிறகு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அவர் ஷாருக்கானின் ஜாவான் படத்தின் பணிகளில் இருப்பதால் அவர் இயக்க மாட்டார் என தெரிகிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் யாராவது இயக்குவார்கள் என தகவல் வெளியானது. ஆனால் ரசிகர்கள், வாரிசு படத்தின்  தெலுங்கு இயக்குனர் செய்ததே போதும். விஜய் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சமுக வலைதளங்களில் ரசிகர்கள்  வெளிப்படையாகவே கூறினர்.

இந்நிலையில் நேற்று முதல் விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவார் என்றும், ஏ.ஜி.எஸ். நிறுவனம் படத்தை தாயரிக்கிறது, இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்ற தகவல்கள்  சமுக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. அஜித்திற்கு மங்கத்தா என்னும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது போல், விஜய்க்கும் வெங்கட் பிரபு ஹிட் கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது.

இது ஒரு புறம் இருக்க கஸ்டடி திரைப்படம் முடிந்தவுடன் சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவார் என தகவல் பரவியது. ஆனால் இப்போது விஜயை வைத்து இயக்குவதால் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணி அடுத்ததாக தொடருமா? அல்லது கைவிடப் படுமா? என தெரியவில்லை.

Previous articleBreaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!
Next articleமது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!