தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

0
280
#image_title

தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு – 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானதில் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த ச்மபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டையில் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியினை சுத்தம் செய்யும் பணியில் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜா, புளியங்கன்னு பகுதியை சேர்ந்த மகேந்திரன், வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த ராமதாஸ் ஆகிய 4 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திடீரென விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜா, மகேந்திரன், ராமதாஸ் ஆகிய மூவரும் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!
Next articleநிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!