2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!!

Photo of author

By Sakthi

2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!!
தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி மீது கவுதம் கம்பீர் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி சமீபத்தில் வெளியிட்ட நாளிதழில் ‘கம்பீரை காணவில்லை. எல்.எஸ்.ஜி-யின் அரக்கனாக அவர் மாறி வருகிறார். கேவலமான அரசியல்வாதி எனக் குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டது. இதை பார்த்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் அதிருப்தி அடைந்தார்.
இந்த செய்தி குறித்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மீது அவதூறு பரப்பும் விதமாக செய்தி வெளியிட்டதற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று பஞ்சாப் கேசரி நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.