மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

0
286
Do you want to file a liquor related complaint? Call this number immediately!!
Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!

விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை நேற்று கைது செய்தனர். ‘கள்ளத்தனமான மது மற்றும் கஞ்சா, சாராய விற்பனை இது தொடர்பான கொலை, குற்றங்கள், போன்றவை காவல்துறைக்கு தெரிவிக்க அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவையின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு துறைக்கு இந்த தொலைபேசி எண் மூலம் (8939473233) தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக காக்கப்படும் என்றும் மாவட்ட சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K