தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!!

Photo of author

By Sakthi

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி68 படத்திற்கான கதை ஏழுதும் பணியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், திரிஷா, அபிராமி, ஜனனி மற்றும் பலர் நடிக்கின்றனர். லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வரும் நிலையில் அங்கு படப்படிப்பை முடித்து இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளது. இதையடுத்து இவர் நடிக்கவுள்ள 68வது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் நடிகர் விஜய் அவர்களிடம் படத்தின் ஒரு வரிக் கதையை கூறியிருக்கிறார். இந்த ஒரு வரிக் கதை நடிகர் விஜய் அவர்களுக்கு பிடித்து விட்டதாம். இதனால் தளபதி68 படத்திற்காக முழுக் கதையையும் எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைக்கவுள்ளாராம். AGS எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தளபதி68 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவுகம் தகவல்கள் வெளியாகியுள்ளது.