கொரோனா வைரஸ் எதிரொலி! ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு!

0
198

கொரோனா வைரஸ் எதிரொலி! ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு!

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைப்பது குறித்த திட்டம் எதுவுமில்லை என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleபள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!
Next articleஅரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here