விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!! 

0
171
#image_title

விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!!

 

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கீரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கீரை புளிச்சகீரை ஆகும். இந்த கீரை ஹார்மோன்களை சமப்படுத்தி கருவுறுதலை மேம்படுத்தும். அது மட்டுமில்லாமல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. இந்த கீரையின் நன்மைகள் பற்றியும் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

 

புளிச்சகீரை…

 

புளிச்சக் கீரை என்பது அடர் இளஞ்சிவப்பு நிறப் பூக்களை இது கொண்டிருக்கும். இந்த கீரை புளிப்புச் சுவை உடையது. இந்த புளிப்புச் சுவை கொண்ட புளிச்ச கீரையை துவையல் அதாவது சட்னி ஆக்கி பயன்படுத்துவது வழக்கம். இந்த புளிச்ச கீரையின் நன்மைகள் என்ன இந்த கீரையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

புளிச்ச கீரையின் பயன்கள்…

 

* புளிச்ச கீரையை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றது.

 

* இந்த புளிச்ச கீரையை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்து இதன் மூலம் ஹீமோ குளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகின்றது.

 

* நம் உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரிக்கின்றது. மெக்னீசியம் சத்துக்களை அதிகரிக்கின்றது. மேலும் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றது. உணவில் இருக்கும் சத்துக்களானது இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களை கொண்டு சேர்க்க புளிச்ச கீரை உதவியாக இருக்கின்றது

மேலும் இந்த புளிச்ச கீரை உணவில் உள்ள கால்சியம், மெக்னீசம் சத்துக்களை எலும்புகளுக்கு கொண்டு சேர்க்கவும் உதவியாக உள்ளது.

 

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புளிச்ச கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

* புளிச்சக் கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது செரிமான கோளாறுகள் சரியாகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

* புளிச்ச கீரையை நாம அதிக அளவு எடுத்துக் கொண்டால் சிறுநீரகத் தொற்றுக்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும்.

 

* இந்த புளிச்ச கீரையை அதிக அளவு நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது கண் பார்வை தெளிவடையும்.

 

* நினைவாற்றல் அதிகரிக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் இந்த புளிச்சக் கீரை பயன்படுகிறது. இந்த புளிச்ச கீரை புற்றுநோயை வராமலும் பாதுகாக்கும்.

 

* புளிச்ச கீரையில் நல்ல கொழுப்புகள் அதிக அளவு இருக்கின்றது. இவை நம் உடலில் உள்ள மொத்த குழுப்பின் அளவை குறைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கின்றது.

 

* புளிச்சக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதயம் நன்கு பலம் பெறும்.

 

* இந்த புளிச்ச கீரையில் இருக்கும் குரோமியம் பிக்ரோலினேட் மூலப்பொருள் சர்ககரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது.

 

* இந்த புளிச்ச கீரையை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.

 

* மேலும் புளிச்ச கீரை இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் பயன்படுகின்றது.

 

*இந்த புளிச்ச கீரை பெண்களுக்கு ஏற்படும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறப்பான மருந்து என்று கூறலாம்.

 

* பெண்களின் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரேன் ஆகிய ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது.

 

* LH அளவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.

 

* சரியான நேரத்தில் கரு முட்டையை வெடிக்க வைத்து அண்டவிடுப்பினை நடக்க உதவுகின்றது. மேலும் இந்த புளிச்சக் கீரை கருமுட்டை சேமிப்பை பலப்படுத்துகின்றது.

 

புளிச்சக் கீரையை பயன்படுத்தும் முறை…

 

புளிச்சக் கீரையின் இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். புளிச்சக் கீரை சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கும் என்பதால் இதை கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

புளிச்சக் கீரை பொடியை நாம் சாதத்தில் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம். இந்த புளிச்சக் கீரையின் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவுகின்றது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ்பிரச்சனையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.

Previous articleஉடலில் உள்ள வலிகள் 10 நிமிடத்தில் பறந்து போக இதோ இப்படி ஒத்தடம் கொடுங்க!!
Next articleசிறுநீரக கற்கள் முதல் சிறுநீர் கடுப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்கும் ட்ரிங்!!