ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!!
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு பெற்று அவசரச் சட்டம் கொண்டு வந்துது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோடைகால விடுமுறைக்காக நீதிமன்றம் மூடப்பட்ட அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே நியமன விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்துப் போக செய்யும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த அவசர சட்டம் சட்டவிரோதமானது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் உச்ச நீதிமன்றம் கோடைகால விடுமுறைக்காக மூடப்படும் வரை மத்திய அரசு காத்திருந்ததாக தெரிவித்த கேஜ்ரிவால் இந்த அவசர சட்டம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நீடிக்காது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் என தெரிவித்தார்.
மத்திய அரசின் அவசரச் சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டும் இன்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது என குற்றம் சாட்டிய அவர் ஜூலை.01 ம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.
சேவை விவகாரம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டம் நீதிமன்றத்தின் மீதான நேரடி அவமதிப்பு என தெரிவித்துள்ள கேஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த மத்திய அரசின் நினைப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள அவர் இந்த சட்டம் மாநிலங்களவையில் நடைபெற்ற படாமல் இருக்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.