ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!!
கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. தற்போது திரும்பவும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது, செப்டம்பர் 30 ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும், 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்து இருப்பவர்கள் நாளை முதல் அதாவது மே 23ம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும், இதில் ஒரு நாளைக்கு, ஒருவர் ரூ.20000 வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். மேலும் தமிழக ரேஷன் கடைகளிலும் வாங்க மறுப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் இதை பற்றி கூறியதாவது.
அரசு அறிவித்துள்ள கெடு வரை அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை, ரேஷன் கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், கூட்டுறவு வங்கிகளிலும் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.