10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
215
#image_title

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் அடுத்து வரும் துணை தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மே மாதம் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 9,14,320 பேரில் 4,55,017 மாணவிகளும், 4,59,303 மாணவர்களும் அடங்குவர். முடிவில் 8,35,614 பேர் வெற்றி பெற்றனர். அதில் 4,04,904 மாணவர்கள் மற்றும் 4,30,710 மாணவிகள்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, 10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல் இந்த கல்வி ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31ஆம்தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆர்.ஆர்.ஆர் திரைப்பட நடிகர் காலமானர்! இரங்கல் தெரிவித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு!!
Next articleபுத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்!