அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!
தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரௌபதி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல கதாநாயகர்கள் யாரும் நடித்திராத இந்த படத்திற்கு பெரிய நடிகர்களின் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை விட அதிகமான முக்கியத்துவத்தை தமிழக மக்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி அவர்களின் இரண்டாம் படைப்பான இந்த திரௌபதி படத்தின் டிரெயிலர் வெளியான நாள் முதல் பல்வேறு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதே நேரத்தில் சாதி மறுப்பு இயக்கங்கள் சில இந்த படத்தை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தன. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் படம் வெளியானதும் முதல் ஆளாக இந்த படத்தை பார்ப்பதாகவும், படக் குழுவினருக்கு தேவையான சட்ட உதவியை தருவதாகவும் கூறினார். இதனையடுத்து பாஜகவின் ஹச். ராஜா அவர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆதரவு தெரிவித்த பாமக மற்றும் பாஜக என இரு அரசியல் கட்சி தலைவர்களும், அதன் கட்சி நிர்வாகிகளும் நேற்று திரையிடப்பட்ட திரௌபதி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து படத்திற்கான தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்தனர்.படம் வெளியான இன்று அதிமுக,திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தொண்டர்களும் எந்த பாகுபடுமின்றி இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் திமுகவை சேர்ந்த விளம்பர பிரியறான தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அந்த மாவட்டத்தில் மட்டும் இந்த திரைப்படம் வெளியிட முடியாத அளவிற்கு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை சித்தரிக்கும் படமாக வெளியான அசூரன் திரைப்படத்தை திமுக தலைவர் சென்று பார்த்ததும் அதனால் ஏற்பட்ட சிக்கலும் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது நாடகக் காதல் மற்றும் ஆனவக் கொலைகள் மூலம் பெரும்பான்மை சமுதாய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளியாகியுள்ள திரௌபதி படத்தை பார்க்க ஸ்டாலின் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு அவர் கட்சி தொண்டர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது.
கடந்த கால தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசுகிறது. சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே குற்றமிருந்தாலும் அதையெல்லாம் திமுக கண்டு கொள்ளாமல் கடந்து வந்தது. அப்படி கண்டு கொள்ளாமல் வந்த பிரச்சினைகளில் இந்த நாடகக் காதலும் அதனால் பெண்ணை பெற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும் ஒன்று.
திமுகவில் அனைத்து சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினராக உள்ள நிலையில் இனியாவது ஸ்டாலின் சமத்துவத்துடன் நடந்து கொள்வாரா? அசூரன் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை போல திரௌபதி படத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தியேட்டருக்கு சென்று பார்ப்பாரா? என்று பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன.
தற்போதைய சூழலில் ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் அதை வைத்து அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை விமர்சிக்க எதிர்க் கட்சியினர் தயாராக உள்ளனர். ஸ்டாலின் எதை செய்தாலும் எதிராக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த திரௌபதி பட விவகாரமும் திமுகவினருக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.