ஆண்களே உஷார்!! விந்தணுக்களை குறைக்க செய்யும் மீன் மேக்கர்!!

0
345
#image_title

ஆண்களே உஷார்!! விந்தணுக்களை குறைக்க செய்யும் மீன் மேக்கர்!!

மீல் மேக்கர் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்ன தீமைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீல் மேக்கர் என்பது கார்போ ஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சத்துகள் உள்ள பொருள் தான். இந்த மீல் மேக்கர் தற்போது அமெரிக்கா நாடு உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

சீனர்கள் 4000 வருடத்திற்கு முன்பே அறுவடை செய்து பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்தியாவில் இதன் பயன்பாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு அதிகரித்து விட்டது.

 

இந்த மீல் மேக்கரின் நன்மைகள்…

 

* 100 கிராம் மீல் மேக்கரில் 52 கிராம் அளவு புரோட்டீன் சத்துக்களும், 37 கிராம் அளவு கார்போ ஹைட்ரேட் சத்துக்களும், 1 கிராம் அளவு கொழுப்புச் சத்தும் உள்ளது. இதில் பைபர் சத்து 13 கிராம் அளவு உள்ளதால் மீல் மேக்கர் உடலுக்கு ரொம்ப நல்லது.

 

* கோழிக்கறி மற்றும் முட்டையில் இருக்கும் புரோட்டீன் சத்துக்களை விட மீல் மேக்கரில் தான் புரோட்டீன் சத்துக்கள் அதிக அளவு இருக்கின்றது.

 

* இந்த மீல் மேக்கர் சாப்பிடுவதால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.

 

* இந்த மீல் மேக்கர் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைகிறது.

 

* மீல் மேக்கரில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், ஒமேகா சத்துக்கள் அதிக அளவு உள்ளது.

 

* ஒரு நாளுக்கு 25 கிராமிலிருந்து 30 கிராம் மீல் மேக்கர் சாப்பிடலாம்.

 

* இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பவர்கள் இந்த மீல் மேக்கரை சாப்பிடுவதன் மூலம் இரத்த அளவை அதிகரிக்கலாம்.

 

மீல் மேக்கர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்…

 

எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது தீமைகளை தான் கொடுக்கும். அந்த வகையில் ஒரு நாளுக்கு 30 கிராம் அளவுக்கு மேல் இந்த மீல் மேக்கர் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு இது தீமைகளை அளிக்கின்றது.

 

* இந்த மீல் மேக்கரில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஈஸ்ட்ரோஜென், பைட்டிக் ஆசிட் உள்ளது.

 

* ஆண்கள் அளவுக்கு அதிகமாக இந்த மீல் மோக்கரை சாப்பிட்டால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை இது குறைக்கின்றது.

 

* தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் மீல் மேக்கரை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் மீல் மேக்கரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

 

ஒரு நாளுக்கு சோயா தொடர்பான எந்த ஒரு பொருளானாலும் 30 கிராம் அளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

Previous articleஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!
Next articleநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை தினமும் 10 சொட்டு எடுத்தால் போதும்!!