வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

0
184

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பு வக்கீல் சாப் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க். அந்த திரைப்படம் பெண்ணிய கருத்துகளை ஆணி அடித்தாற்போல சொல்லிய நிலையில் அதை தமிழில் ரீமெக் செய்ய விரும்பினார் அஜித். இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்க நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் அந்த படம் வெளியானது.

அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பெண்கள் கூட்டம் அஜித் படத்துக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகளவில் குவிந்தது.  இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டனர். மேலும் அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாக்களில் நடிக்காமல் இருந்த பவன் கல்யாணை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர்.

நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு தனது அரசியல் இமேஜுக்கு உதவும் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் பவன். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் படத்திற்கு ‘வக்கீல் சாப்’ எனப் பெயர் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்காக பவன் கல்யாணுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது தெலுங்கு சினிமா உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Previous articleதிரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்
Next articleசூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !