வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!!
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாக கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்த பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருகுலைத்துவிட்டு இருக்கிறார்.
கேட்க ஆளின்றி கிடந்த அந்தப் பெண் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தார். நடிகை நிஷா என்கிற நூருன்னிசா ஆவார். கல்யாண அகதிகள் டிக் டிக்…டிக்.., ஐயர் தி கிரேட், ராகவேந்திரா, இளமை இதோ இதோ,’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நிஷாநூர் ஆவார். தமிழில் மங்கள நாயகி என்ற படத்தின் முலம் நாயகியாக அறிமுகமானவர். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். டாப் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நிஷா ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை, தயாரிப்பாளர் ஒருவரால் தடம் மாறிப்போன நிஷா எங்கே போனார் என்றே பல ஆண்டுகள் தெரியாமல் இருந்தது.
பின்னர் பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே பரிதாபமான நிலையில், சாலையோரம் நிஷா எலும்பு, தோலுமான நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரணம் அவருக்கு ஏற்பட்ட எய்ட்ஸ் நோய்.
இதனையடுத்து, நிஷாவின் உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடி கொண்டிருந்ததை பார்த்த முஸ்லிம் முன்னேற்ற கால ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிஷா சிகிச்சை பலனின்றி பலியானர்.