அன்புமணி ராமதாஸ் தான் தமிழக முதல்வர்! வெளியான அதிரடி அறிவிப்பு
இன்று பாமக சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்தார். இந்நிலையில் முன்னால் பாமக நிர்வாகியும் தற்போது தினகரன் அணியில் இருப்பவருமான பொங்கலூர் மணிகண்டன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வர வேண்டும் என தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மாவட்ட வரியாக இளைஞர்கள் அனைவரையும் சந்தித்து வரும் நிலையில் இவருடைய இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.
முதல்வர் அன்புமணியை எல்லோரும் சந்தித்தார்கள் என்ற செய்தி வர வேண்டும் என்று பாமகவில் இல்லாத எனக்கும் அந்த ஆசை உண்டு. தமிழகத்தில் ஏதாவது அரசியல் மாற்றம் நிகழ்ந்தோ,மகாராஷ்டிரா -கர்நாடகாவைப் போன்று அரசியல் மாற்றம் உருவாகியோ கூட்டணி மந்திரி சபை அமைந்தோ அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
பூரண மதுவிலக்கு,விவசாயத்துக்கு முன்னுரிமை,நீர் மேலாண்மை,
வேலைவாய்ப்பு,இயற்கை விவசாயம்,நிலங்கள் பாதிப்பில்லா தொழில்வளர்ச்சி,சமூக நீதி,எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாடு இன்னும் தமிழகத்துக்கான விடிவு காலத்திட்டங்களை நிறைவேற்ற பாமக தலைமையில் அன்புமணி முதல்வரானால் மட்டுமே நடக்கும்.எனவே தான் படித்தவர் என்பதாலோ,நான் அந்தக் கட்சியில் இருந்தவன் என்பதாலோ அன்புமணி மீது அக்கறை கொண்டு இதை சொல்லவில்லை.
தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை செய்து வைத்து கனவு கொண்டு தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று துடிப்பவர், துணிவானவர், எல்லா சமுதாயங்களையும் நேசிப்பவர். நிர்வாகத் திறமை-சாதாரண மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டவர் ஆளுமை திறனுடையவர்.
அரசுத்துறை அதிகாரிகள்,ஆட்சிப்பணி,காவல் பணி அதிகாரிகளை
மிக சரியாக மக்களின் உணர்வுகளை புரிந்து நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வைக்கும் ஆற்றலுடையவர் அன்புமணி என்பதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்றே கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கும் போதும் பாமகவில் இணைந்தேன்.
ஆனால் நாங்கள் அன்புமணி முதல்வராக வேண்டும் என்று விரும்பிய போது இவர்கள் எடப்பாடியை முதல்வராக்க சென்று விட்டார்களே என்ற கோபம் அப்போது இருந்தது.ஆனால் இன்று சிந்திக்கிற போது தமிழகத்தின் மிகப் பெரிய தீமை திமுகவை ஆட்சிக்கு வர முடியாமல் செய்து விட்டார்கள் என்பதில் மகிழ்ச்சியும் உண்டு.
என்னை பொறுத்தவரை ”கூட்டணி அமைத்தது” என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அன்புமணி முதல்வராகும் வாய்ப்பை உருவாக்கினால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். பாமகவில் இருந்த போது எனது சொந்த செலவில் தான் கட்சிப்பணியை செய்தேன்.அங்கே மட்டுமல்ல எங்கேயும் எப்போதும் யாரிடமும் ஒரு பைசா பெற்றதுமில்லை.
மற்றவர்கள் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.நான் பாமகவில் இருந்த போது கட்சி வளர வேண்டும் என்பதை தவிர வேறு நோக்கமே இல்லாமல் தான் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றி இருக்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களுக்கும் மிக நன்றாக தெரியும்.
பொதுவாழ்வில் அரசியலில் எப்படி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் யாரையும் அவமதித்துப் பேசியதே இல்லை.கொள்கை அளவிலேயே விமர்சனம் செய்ததுண்டு.உண்மையில் வன்னிய சகோதரர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதியே என்னிடம் பழகினார்கள்.பாசம் வைத்து அன்பு செலுத்தினார்கள் என்பதை நான் எப்போதும் மறைத்து பேசியதே இல்லை.ஓரிரண்டு கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் நான் அவர்களோடு பணியாற்றிய காலங்கள் என் வாழ்வில் மறக்கவே முடியாதவைகள் தான்.
அய்யாவும் என் மீது அளவு கடந்த அன்பை அரசியல் கடந்து வைத்து இருந்தார்கள் என்பதும் மறக்கவே முடியாதவை.பாமகவில் நான் இப்போது இல்லை என்றாலும் அது தான் எனது தாய் இயக்கம் என்பது எப்போது மாறாது. அந்த அளவில் தான் எனக்கு மருத்துவர் அய்யா அவர்கள் மீதுள்ள அன்பில் ”தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் ” சமூக நீதியின் அடிப்படையில் ஒரு பெரிய சமுதாயம்,முதன்மையான சமுதாயம் வன்னியர் சமுதாயம் முதல்வர் பொறுப்பில் அமரவேண்டும் என்றே பொதுக்கூட்ட மேடைகளில் பேசியவன் நான்.
அப்படி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே அதற்குப் பொருத்தமானவர் என்று நான் முன்னர் பேசிய கருத்தை இப்போதும் எப்போதும் ஆதரிக்கிறேன்.ஏற்கிறேன். காலம் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.எல்லாமே காலத்தின் கையிலேயே இருக்கிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.