தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

0
170

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார்.

பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழியை முதல் முதலாக மதன் அறிமுகப்படுத்தினார். அந்த வித்தியாசமான மொழியினை தாய்மொழி தினத்தன்று இயக்குனர் ராஜமெளலி வெளியிட்டிருந்தார். இந்த கிளிக்கி மொழியின் வடிவமைத்த எழுத்து மற்றும் எண்களை கற்றுக்கொள்ள புதிய ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த மொழியை கற்பதற்கு மிகவும் எளிதாகவும் விரைவில் கற்க முடியும் என்று வெளியீட்டின் போது கூறப்பட்டது.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் அதிக விருதுகளை குவித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் மகன்தான் மதன் கார்க்கி என்பது குறிப்பிடத்தக்கது.