உலக டெஸ்ட் சேம்பியன்சிப் இறுதி போட்டி!ருத்ராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு!!

0
194
#image_title
உலக டெஸ்ட் சேம்பியன்சிப் இறுதி போட்டி!ருத்ராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு!
ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதாக இருந்த இந்திய வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்குபெறும் இந்திய அணி பயிற்சி எடுப்பதற்காக லண்டன் கிளம்பி சென்றுள்ளனர். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு மீதம் உள்ள வீரர்கள் லண்டன் கிளம்பி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் உலக டெஷ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களும் இடம்பெற்றுள்ளார். தற்போது கிடைத்த தகவலின் படி ருத்ராஜ் கெய்க்வாட் அவர்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் அவர் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஜூன் 3 அல்லது 4ம் தேதி அவரது திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதனால் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கு  இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியுடன் செல்ல முடியாது என்றும் பிசிசிஐக்கு ருத்ராஜ் கெய்க்வாட் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பிசிசிஐ நிர்வாகம் யஷஸ்வி ஜெய்ஸ்சிவாலை சிவப்பு பத்தில் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஏன் என்றால் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்சிவால் அவர்களின் பெயரை அணியில் சேர்க்கவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் ஐந்து அரைசதங்கள் உள்பட 625 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous articleநடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!
Next articleஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!