பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்கள் படிப்பதற்கு அனைத்து பொருட்களும், யூனிபார்ம், புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான்ஸ், ஸ்கூல் பேக் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது.
தற்போது திருக்குறளின் 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. திருக்குறள் இலக்கியங்களில் சிறந்தது. திருக்குறளின் பொருளானது, அனைத்து மனிதர்களின் அடிப்படை வாழ்வியலுக்கானது, இது கல்வி, தனி நபர் ஒழுக்கம், கருணை, அன்பு, பொறுமை, நன்றியுணர்வு, கடமை, இல்வாழ்க்கை போன்றவற்றை கூறுகிறது.
இந்த திருக்குறளையும், அந்த செய்யுளின் விளக்கங்களையும் மனனம் செய்யும் மாணவர்கள் கல்வியறிவோடு, நல்லொழுக்கத்தையும் பெறுவார்கள். எனவே திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களை பாராட்டி, பரிசுத்தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. 10 ஆயிரம் ரூபாயாக இருந்த பரிசுத்தொகையை தற்போது 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை சொன்னால் அதற்குரிய திருக்குறளை சொல்லும் திறன் இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருக்குறளின் சிறப்புகள், விளக்கங்கள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் என அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.