மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! 

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!!
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திற்கு டப்பிங்கை தொடங்கியுள்ளதாக மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் சேர்ந்து பல வருடங்களுக்கு பிறகு நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மாவீரன் திரைப்படம் தெலுங்கு மொழியில் மாவீரடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது. மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாவதால் படக்குழு வேக வேகமாக படத்தின் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிறிய வீடியோவாக பதிவு செய்து இந்த தகவலை அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் “வீரமே ஜெயம்” என்று கூறி படத்தின் டப்பிங்கை தொடங்குவது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.