இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!
இலங்கை நாட்டில் மதம் தொடர்பான அவதூறு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இதை தடுக்க இலங்கையில் புதிய சட்டம் இயற்றுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நமது அண்டை நாடன இலங்கையில் மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவி வருகின்றது.
சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் நதாஷா எதிர்சூரியா அவர்கள் மதம் தொடர்பான அவதூறான கருத்துக்களை வீடியோவகா பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் நதாஷா எதிர்சூரியா செய்த செயலுக்காக மன்னிப்பு கோரினார்.
காமெடி நடிகர் நதாஷா எதிர்சூரியா மன்னிப்பு கேட்டபோதும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது நடிகர் நதாஷா ஈதிர்சூரியா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசனையில் இறங்கிய இலங்கை அரசு அதிகரத்து வரும் மதம் சாரந்த சம்பவங்களை கட்டுப்படுக்த இலங்கை அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா அவர்கள் “மதங்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்றபடவுள்தாகவும் இதற்கான வரைவே மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது” என்றும் கூறினார். இம்மாதம்(மே) தெடக்கத்தில் புத்தர் குறாத்தி கிறிஸ்தவ பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.