வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!!
தமிழ்நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது எதுவென்றால் மதுபான கடைகள் தான்.தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக அதன் பொறுப்புக்களை செந்தில் பாலாஜியி்டம் கொடுத்துள்ளது.இவர் மேல் முன்னதாகவே பல புகார்கள் இருந்து வரும் வேளையில் தற்பொழுது மதுபானம் கடை ரீதியாகவும் புகார்கள் மேலிடத்திற்கு வந்த வண்ணமாகவே தான் உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக பல சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளது.அந்தவகையில் சமீபத்தில் பிடிஆர் பழனிவேல் அவர்களின் வீடியோ அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் பெருமளவில் பேசும் பொருளாக மாறியது.இதனின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வருவதற்குள், அதற்கு தண்டனை தரும் விதத்தில் ஸ்டாலின் பிடி ஆர் யின் துறையை மாற்றியமைத்தார்.
இவ்வாறு இவர் செய்வதினால் மக்கள் இதனை மறந்துவிடுவார்கள் என என்னியுள்ளார் போல,ஆனால் இதுவே அவர்களது ஆட்சி செய்யும் லட்சணத்தை மக்களுக்கு எடுத்துறைத்துள்ளது.ஒருவர் தவறு இழைக்கும் பொழுது அதற்கு முறையான தண்டனை வழங்காமல் அதற்கு மாறாக அதனை மறைக்கும் விதத்தில் பதவி மாற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு அடுதப்பாடியாக தற்பொழுது செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்த புகார் எழுந்துள்ளது.டாஸ்மாக் கடைகள் மாதம் ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என இவர் கேட்டதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையானது.அதனையடுத்து தற்பொழுது பெரும்பாலானோர் வைக்கும் புகாராக இருப்பது, மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவது தான்.
இவ்வாறு வசூல் செய்யப்பட்டால் புகார் அளிக்கும்படி செந்தில்பாலாஜி கூறியும் பல கடைகளில் தற்பொழுது வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடைகளில் இவ்வாறு வசூல் செய்யப்படுவதால் மதுபிரியர்கள் அக்கடை முன்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் கூடுதலாக வசூல் செய்யப்படும் 10 ரூபாய் எந்த பிச்சைகாரனுக்கு செல்கிறது,அவ்வாறு வசூல் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.இல்லையென்றால் மதுபான கடை மூட வேண்டும் என கூறியுள்ளனர்.தற்பொழுது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் உள்ளதால் அவர் தமிழ்நாடு திரும்பியதும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.இந்த துறை வேறோரு நபருக்கு மாற்றப்படும் என்றும் குறிப்பாக உதயநிதியின் நெருங்கியவருக்கு தர அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.