இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!
புகையிலை எதிர்ப்பு நாளான இன்று தமிழகத்தில் இது குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. புகையிலை என்றாலே மனிதனை சிறிது சிறிதாக கொள்ளும் ஒரு பொருளாக இருக்கும் பட்சத்தில் இதனை விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை தடை விதித்தும் மீண்டும் அமலுக்கு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இனி பீடி மற்றும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் புதிதாக உரிமம் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அந்த வகையில் உரிமம் பெரும் கடைகள் வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டாயம் பீடி மற்றும் சிகரெட் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் புகையிலை விற்பனை சற்று குறைவாக காணப்படும்.
இந்த வரைமுறைகளை மீறி வேறு ஏதேனும் பொருட்களை விற்று வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.அத்தோடு இவ்வாறன விதிகளை மீறுபவர்களின் உரிமைத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளனர். இன்று புகையிலை ஒழிப்பு தினம் என்பதால் தமிழக அரசு இவ்வாறான புதிய விதிமுறைகளை அமல்படுத்தி புகையிலை விற்பனையை குறைக்க முன்வந்துள்ளது.