அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!!

0
236
Annamalai who has no knowledge.. Look here I will tell you - DMK Minister blasts on Twitter!!
Annamalai who has no knowledge.. Look here I will tell you - DMK Minister blasts on Twitter!!

அறிவே இல்லாத அண்ணாமலை.. இதோ பார் நான் சொல்லி தருகிறேன் – டிவிட்டரில் விளாசும் திமுக அமைச்சர்!!

அமுல் நிறுவனம் தங்களது தயாரிப்பை தமிழகத்தில் விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது பால் கொள்முதலையும் கைப்பற்ற உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் அமுல் நிறுவனம் தற்பொழுது பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடுக்கும் படியும் கூறியிருந்தார்.

இந்த கடிதம் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.அதில், அமுல் நிறுவனத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமே குஜராத்தில் தான் உள்ளது. இது கூட தெரியாமல் நம்ம தலைவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஒன்பது ஆண்டுகால வரலாற்றில் இப்படி எதுவும் நடந்திருக்காது என கேலி கிண்டல் அடித்தார்.

இவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமைச்சர் டிஆர்பி ராஜாவும் பதில் ட்வீட் அளித்துள்ளார்.அதில், அமித்ஷா மத்திய அமைச்சராக ஆட்சியில் அமர்ந்து நான்காண்டுகள் தான் ஆகிறது. அது கூட தெரியாமல் தமிழக பாஜக தலைவர் 9 ஆண்டுகள் என கூறுகிறார். அவர்களுடைய கட்சியைப் பற்றியே அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை.

இவ்வாறு ஏதாவது பேசி அவர்களது தலைவர்களை தர்ம சங்கட நிலைக்கு தள்ளுவதியே வேலையாக வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் படித்தும் கூட இவர்களுக்கு போதிய அறிவு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், அரசியலமைப்பு சட்டம் பற்றிய எதுவும் இவர்களுக்கு தெரியவில்லை. மேலிடத்தில் எத்தனை மத்திய அமைச்சர்கள் உள்ளனர், அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள்.

மத்திய கூட்டுறவு துறையின் பொறுப்பில் இருப்பவர் தான் அமித்ஷா. எனவே இது குறித்த புகாரை அவரிடம் தானே தெரிவிக்க முடியும். இது கூட தெரியாமல் இருக்கும் இவருக்கு அறிவு என்பதே இல்லை என தக்க பதிலடி கொடுத்துள்ளார். தங்களது சொந்த அரசை பற்றியே தெரியாமல் இருக்கும் அண்ணாமலை குறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

Previous articleநீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா!!
Next articleசமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!