இனி இங்கேயும் பெண்களுக்கு இலவசம் தான்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக அதன் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவோம் என கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் ஐந்து சிறப்பம்ச திட்டங்களுக்கு கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தியவுடன் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நாளடைவில் புகார்கள் அதிக அளவில் வர தொடங்கி விட்டது. ஆனால் முதன் முதலில் தமிழகத்தில் தொடங்கிய இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் தற்பொழுது கர்நாடகாவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது.
இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது.அந்தவகையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பேருந்து வசதியை அமல் படுத்துவோம் என காங்கிரஸ் கூறியது. அதேபோல காங்கிரஸ் வெற்றியடைந்ததை அடுத்து இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பெண்கள் மத்தியில் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.