மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எச்சரிப்பதாக அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “கர்நாடக மாநிலத்தின் முந்தைய அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்த போது எனது தலைமையிலான அம்மா அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.
மேலும் நான் முதலமைச்சராக இருந்த போதும் சரி எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போதும் சரி நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு அளித்து வருகிறேன். மேலும் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாலைவணமாகிவிடும் என்றும் எடுத்து கூறியுள்ளேன்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956ல் நதிநீரை தடுத்து நிறுத்தவோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்துக்கும் எந்தவித உரிமையும் கிடையாது என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி ஆணையில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன்னர் கீழ்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேகதாது விவகாரத்தில் திறனற்ற திமுக அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முடிவை வன்மையாக கண்டிப்பதோடு தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறுவதை தடுக்க அனைத்திந்திய அண்ணா திராடவிட முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுக்கும் என கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.