2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!
உச்சநீதி மன்றத்தில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக தொடரபட்ட வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மக்கள் தங்கள் கைவசம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்தவித ஆவணமும் காட்ட அவசியமில்லை என்றும் ஒரு நபர் ஒரு நாளுக்கு 20000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து ஆவணங்கள் இன்றி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க கோரியதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.