மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் !

0
148

மைதானத்தில் கட்டுப்பாட்டை இழந்த கோலியின் செயல்: நிரூபரின் கேள்வியால் மேலும் ஆத்திரம் !

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

அதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மோசமான பேட்டிங்கால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக விராட் கோலியின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் மொத்தமாக 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 38 ரன்களே சேர்த்தார்.

இந்நிலையில் இன்று அவர் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் மேலும் அவருக்கு எதிரான கண்டனங்களை அதிகமாக்கியுள்ளது. இன்று காலை நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வில்லியம்சனின் விக்கெட்டின் போது விராட் கோலி ஆக்ரோஷமாக கூச்சலிட்டு கொண்டாடினார். அதே போல மற்றொரு பேட்ஸ்மேனான டாம் லாதம் விக்கெட்டின் போது பார்வையாளர்களை நோக்கி ஆக்ரோஷமாக கெட்ட வார்த்தைகளை உதித்தார். இது மைதான திரையில் ஒளிப்பரப்பான போது அனைவரும் கோலியின் செயலால் முகம் சுளித்தனர்.

போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. பேட்டியின் போது ஒரு நிரூபர் ‘இந்திய கேப்டனாக களத்தில் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்கவேண்டும் என நீங்கள் ஏன் நினைப்பதில்லை?’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி ‘மைதானத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரைகுறை கேள்விகளுடன் வரக்கூடாது. அதுபற்றி நான் நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. நன்றி’ என கூறினார். கோலியின் இந்த அனுகுமுறையானது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Previous articleஒரே கோவிலில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கடவுள்கள்: பிரபல நடிகரின் முயற்சி
Next articleதிருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு